×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகளிர் உரிமைத்தொகை 2,500 எப்போது? CM விஜய் பிறந்தநாளில் எதிர்பார்த்த மக்கள்... வெளியான முக்கிய தகவல்..!!!

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முக்கிய மாற்றம் ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய முதலமைச்சர் விஜய், மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பயனாளிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பிறந்தநாளில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகும் என்று கடந்த சில நாட்களாக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக, பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்ற தகவல் கவனம் பெற்றிருந்தது.

இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!

நிதியமைச்சர் விளக்கம்

இந்நிலையில், தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, மகளிர் உரிமைத் தொகை உயர்வு தொடர்பான அறிவிப்பு உடனடியாக வெளியாகாது என்றும், இது குறித்து வரும் நாட்களில் முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மத்தியில் அதிகரித்த எதிர்பார்ப்பு

தகவலின்படி, தற்போது வழங்கப்படும் தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டால், பெண்களின் குடும்பச் செலவுகள் மற்றும் அன்றாட பொருளாதார தேவைகளுக்கு கூடுதல் ஆதரவாக அமையும் என கருதப்படுகிறது. இதனால் விஜய் அரசு வெளியிடவுள்ள அடுத்தகட்ட அறிவிப்பை தமிழக பெண்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2500 எந்த மாதம் முதல்?. தவெக அரசின் தரமான முக்கிய தகவல்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Magalir urimai thogai #விஜய் அரசு #Women Welfare Scheme #தமிழ்நாடு #₹2500 உரிமைத் தொகை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story