பெண்களே மாதம் ரூ.2500 பெற இது கட்டாயம்....! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க உள்ள பெண்கள், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு மற்றும் e-KYC புதுப்பிப்பை முன்கூட்டியே முடித்தால் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்படாது.
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக புதிய விண்ணப்பங்களை எதிர்பார்த்து பல பெண்கள் தயாராகி வருகின்றனர். மாதாந்திர உதவித்தொகை ₹2,500 ஆக உயர்த்தப்படலாம் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், விண்ணப்பிக்கும் முன் இரண்டு முக்கியமான வங்கிச் செயல்முறைகளை முடித்து வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
ஆதார் - வங்கிக் கணக்கு இணைப்பு அவசியம்
முதலில், விண்ணப்பதாரரின் வங்கிச் சேமிப்புக் கணக்குடன் ஆதார் கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்த இணைப்பு செயல்பாட்டில் (Active) உள்ளதா என்பதையும் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அரசு வழங்கும் நிதியுதவி நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதில் சிக்கல்கள் ஏற்படாது.
இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!
e-KYC புதுப்பிப்பை மறக்க வேண்டாம்
அடுத்ததாக, வங்கிக் கிளையில் e-KYC விவரங்களை புதுப்பித்து சரிபார்ப்பதும் முக்கியமான நடவடிக்கையாகும். e-KYC முழுமையாக புதுப்பிக்கப்பட்டிருந்தால், நிதி பரிவர்த்தனைகளில் தாமதம் அல்லது தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
விண்ணப்பிக்கும் முன்பே தயார் செய்யுங்கள்
அரசு வழங்கும் உதவித்தொகை எந்தவித தடங்கலும் இன்றி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதற்காக இந்த இரண்டு நடைமுறைகளையும் முன்கூட்டியே நிறைவு செய்து வைத்திருப்பது நல்லது. இதனால் விண்ணப்பப் பரிசீலனை மற்றும் நிதி வழங்கும் பணிகள் விரைவாக நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: இன்ப அதிர்ச்சி! திடீரென அக்கவுண்ட்டில் விழுந்த ரூ.1000.....செம ஹாப்பியில் பெண்கள்...!!!