×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை.. வீடியோவை லீக் செய்த கள்ளக்காதலன்... மதுரையில் அதிரவைக்கும் சம்பவம்.!

3 மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை.. வீடியோவை லீக் செய்த கள்ளக்காதலன்... மதுரையில் அதிரவைக்கும் சம்பவம்.!

Advertisement

டியூஷன் படிக்க வந்த மாணவர்களிடம்  உல்லாசமாக இருந்த ஆசிரியை மற்றும் அதனை வீடியோ எடுத்த அவருடைய கள்ளக்காதலன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் வசித்து வரும் ஒரு பெண், 3 மாணவர்களுடன் உல்லாசமாக  இருந்த ஆபாச வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகியிருந்தது. இதுகுறித்து மதுரை மாநகர போலீசாருக்கு தகவல் வந்த நிலையில், ஆபாச வீடியோவை வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் தங்கத்துரை மற்றும் உதவி கமிஷனர் அக்பர்கான் ஆகியோர் உத்தரவிட்டனர். 

உத்தரவின்பேரில், மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அத்துடன் அந்தப் பெண் மாணவர்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு உள்ளதா? என்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் உதவியுடன் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் பாலாஜி நகரை சேர்ந்த ஒரு மாணவரின் செல்போனுக்கு வீடியோ வந்ததை போலீஸ் கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாணவனை வரவழைத்து 'ஆபாச வீடியோவை உனக்கு அனுப்பியது யார்?' என்று விசாரித்தனர். அப்போது தனது மாமா வீரமணிதான் அதனை அனுப்பியதாக மாணவர் தெரிவித்துள்ளார். பின் வீரமணியை அழைத்து கேட்ட போது, மாணவர்களுடன் பெண் உல்லாசமாக இருக்கும் வீடியோவை தான்தான் எடுத்தேன் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

அத்துடன் வீரமணியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், தனக்கன்குளம் பகுதியில் உள்ள தளச்செங்கல் கடையில் வீரமணி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவர் சென்னையில் ரயிலில் சென்ற போது, மதுரையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையான 45 வயது பெண் அறிமுகமாகியுள்ளார்.

இருவரும் தங்களின் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டதையடுத்து, அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் ஆசிரியையை கணவருக்கு தெரிய வர, மனைவியை பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து தனது கல்லூரி படித்து வரும் மகனுடன் ஆசிரியை தனியாக வசித்து வந்துள்ளார்.

கணவர் பிரிந்து சென்ற பின் ஆசிரியைக்கு வீரமணியுடன் கள்ளத்தொடர்பு அதிகரித்துள்ளது. மேலும், அந்த ஆசிரியைக்கு ஆபாச படம் பார்ப்பதில் விருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆபாச வீடியோவில் பார்க்கும் காட்சிகளை போன்ற தானும் இருக்க வேண்டும் என ஆசிரியை நினைத்துள்ளார். அத்துடன் ஆசிரியை ஏராளமான மாணவர்களுக்கு டியூஷன் எடுத்த நிலையில், 2  மாணவர்களுக்கு ஆபாச படத்தை அனுப்பி, ஆசை வலையில் விழ வைத்துள்ளார்.

இதனையடுத்து பள்ளி மாணவர்கள் இருவர் மற்றும் கல்லூரி மாணவர் ஒருவர் என 3 பேரை வரவழைத்து உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும் தான் உல்லாசமாக இருந்ததை தனது கள்ளக்காதலன் மூலமாக வீடியோ எடுத்து, அதனை பார்த்து ரசித்தபடி இருந்துள்ளார். அப்படி எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தான் வீரமணி தனது மருமகனுக்கு அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்தது.

இதனால் ஆசிரியை பயன்படுத்திய லேப்-டாப், கணினி மற்றும் செல்போன் போன்றவை போலீஸாரால் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் 50க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டுபிடித்த போலீசார், ஆசிரியை மற்றும் வீரமணி ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும், ஆசிரியையிடம் டியூஷன் படித்த மாணவர்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#madurai #tamilnadu #India #sexual abuse #video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story