×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Madurai News: அலங்காநல்லூரில் அட்டூழியம் காட்டிய தெருநாய்கள்.. 15 பேர் அலறி மருத்துவமனைக்கு ஓட்டம்.. செவிலியர்கள் சொன்ன ஷாக் தகவல்.!

Madurai Alanganallur Dog Bite: அலங்காநல்லூரில் 15க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்து இருக்கிறது.

Advertisement

வெறிநாய் 15 பேரை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

15 பேர் காயம்:

மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று தெருநாய் ஒன்று மக்களை விரட்டி விரட்டி கடித்து இருக்கிறது. இந்த தெருநாய் காரணமாக ஒரேநாளில் 15 க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க: #Breaking: கழுத்து எலும்பு உடைக்கப்பட்டு., +2 மாணவி வன்கொடுமை கொலை.. பிரேத பரிசோதனையில் ஷாக் தகவல்.!

தடுப்பூசி இல்லை?

இவர்கள் அனைவரும் அங்குள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று இருக்கின்றனர். அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிடி ஊசி மட்டும் செலுத்திக்கொண்ட நிலையில், அங்கு தடுப்பூசி இல்லாத காரணத்தால் மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்த செவிலியர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

கோரிக்கை:

இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், அங்கிருந்து விரைந்து மதுரை சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருக்கின்றனர். இந்த சம்பவத்தால் உள்ளூர் மக்கள் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில், வெறிநாயை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வீடியோ நன்றி: சன் தொலைக்காட்சி 

 
 

 

 

இதையும் படிங்க: ஓடும் லாரியில் 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. உறவினரின் உடந்தையால் அரங்கேறிய பெருங்கொடுமை.. பதறவைக்கும் சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#madurai #Dog Attack #ரேபிஸ் தடுப்பூசி #தெரு நாய்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story