×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெத்த புள்ள செய்யகூடாதா செயலை செய்தான்...! அதான் கொன்னுட்டேன்.. மகனை 3 மாதமாக புதைத்து நாடகமாடிய தாய்! கடைசியில் சிக்கியது எப்படி..? வெளியான திடுக்கிடும் உண்மை!!!

மதுரை அருகே போதையில் தாயிடம் தகராறு செய்த மகனை இரும்புக் கம்பியால் தாக்கி கொன்று, உடலை வீட்டருகே புதைத்ததாக ஐயம்மாள் வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியில் மகனைத் தாயே அடித்துக் கொன்று, உடலை வீட்டின் அருகே புதைத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. போதைப்பழக்கத்திற்கு அடிமையான மகன் தன்னை தகாத முறையில் நடத்த முயன்றதால் தற்காப்புக்காக தாக்கியதாக தாய் ஐயம்மாள் தெரிவித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

போதைப்பழக்கத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்த மனைவி

வரிச்சியூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஐயம்மாளின் மகன் ராஜா (32). தீவிர மது மற்றும் போதைப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படும் அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் தெரிகிறது. அவரது நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த மனைவியும் குழந்தைகளும் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில், சுமார் 3 மாதங்களுக்கு முன்பு ராஜா கடும் போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்ததுடன், அவரை தகாத முறையில் நடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! மாதாந்திர தொகை உயர்வு... அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு!!!

இரும்புக் கம்பியால் தாக்கியதாக வாக்குமூலம்

இதனால் ஆத்திரமடைந்த ஐயம்மாள், தற்காப்புக்காக ராஜாவை கீழே தள்ளிவிட்டு அருகில் கிடந்த இரும்புக் கம்பியால் அவரது தலையில் பலமாக தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அதன்பின், வீட்டின் அருகே கழிவறை அமைப்பதற்காக ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த குழியில் ராஜாவின் உடலை புதைத்துவிட்டு, மகன் காணாமல் போனதாக ஐயம்மாள் கூறி வந்ததாக தெரிகிறது.

சந்தேகம் அதிகரித்த நிலையில் உண்மை வெளியானது

ராஜா நீண்ட நாட்களாக காணாமல் போனது குறித்து கிராம மக்களிடையே சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீஸாரின் கண்காணிப்பும் அதிகரித்ததாக கூறப்படுகிறது. மன உளைச்சலுக்கு ஆளான ஐயம்மாள், கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து மகனை கொன்று புதைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜாவின் உடல் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை அடையாளம் கண்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மதுரை கொலை வழக்கு தொடர்பாக ஐயம்மாள் அளித்த வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையையும் போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: சொந்த வீட்டில் கைவைத்த இளைஞர்.. காதலியுடன் சொகுசு உல்லாசம்.. நடந்த சம்பவம் என்ன? 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மதுரை கொலை #ஐயம்மாள் #ராஜா #Madurai crime #Mother Son Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story