தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பணத்தகராறில் அண்ணனை கொன்ற தம்பி.. ஆம்புலன்ஸ் பின் ஓடிய பாசமிகு நாய்.. மதுரையில் கண்ணீர் சோகம்.!

பணத்தகராறில் அண்ணனை கொன்ற தம்பி.. ஆம்புலன்ஸ் பின் ஓடிய பாசமிகு நாய்.. மதுரையில் கண்ணீர் சோகம்.!

Madurai Man Killed by Brother Dogs Feeling Sad Run with Ambulance Advertisement

சொந்த அண்ணனை தம்பி பணத்தகராறில் கொலை செய்த நிலையில், அண்ணன் பாசமாக வளர்த்து வந்த நாய் அவசர ஊர்தி பின்னாலேயே ஓடிய சோகம் நடந்தது.

மதுரை மாவட்டத்தில் உள்ள கீழவளவு கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவர் தபால் ஊழியர் ஆவார். இவரின் சகோதரர் கார்த்திக். இருவருக்கும் இடையே பணத்தகராறு இருந்து வந்ததாக தெரியவருகிறது. 

இந்நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில், கார்த்திக் ராஜீவ் காந்தியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

madurai

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ராஜீவ் காந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த சமயத்தில், அவரின் வளர்ப்பு நாய் ராஜீவ் காந்தியின் உடல் அருகே சுற்றி வந்தது. 

மேலும், அவசர ஊர்தியில் அவரின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பியபோது, நாயும் வாகனத்திற்கு பின்னாலேயே ஓடியது காண்போரை கண்கலங்க செய்தது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#madurai #Murder #brother #police #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story