தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கர்ப்பிணிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் தொடரும் உயிர்ப்பலி.. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் மீது செவிலியர்கள் பரபரப்பு புகார்.!

கர்ப்பிணிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் தொடரும் உயிர்ப்பலி.. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் மீது செவிலியர்கள் பரபரப்பு புகார்.!

Madurai Govt Rajaji Hospital Doctors Poor Treatment  Advertisement

 

மதுரை மாநகரில் செயல்பட்டு வரும் அரசு ராஜாஜி மருத்துவமனையில், பிரசவத்திற்கு அனுமதியாகும் பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் பல கர்ப்பிணி பெண்கள் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். 

கடந்த செப். 29ம் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட 23 வயது இளம்பெண், அதிக இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளார். இம்மாதத்தில் இதுபோன்ற மரணம் மூன்றாவது ஆகும். 

மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியமே காரணம். பிரசவ அறுவை சிகிச்சைக்கு பின்னர் உரிய சிகிச்சை மேற்கொள்ளாமல், அலட்சியத்தின் காரணமாக உயிரிழப்பு நடக்கிறது. 

இதற்கு டெங்கு உட்பட பிற விஷயங்கள் காரணமாக மரணம் ஏற்பட்டுவிட்டதாக கூறுகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளான எங்களின் மீது புகார் அளிக்கிறார்கள். 

கர்ப்பிணி பெண்களின் மரணம் தொடர்பான விவகாரத்தில், அலட்சியமாக பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர ஆரம்ப நிலைய சுகாதார ஊழியர்கள் அதிர்ச்சி புகாரை மாநகர ஆணையரிடம் கூறியுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் கூறுகையில், "கர்ப்பிணி பெண்கள் இறப்பு சமீபத்தில் அதிகரித்துள்ளது. நாங்கள் எங்களுக்கு வரும் அவசர சிகிச்சையை உடனடியாக முதலுதவி அளித்து பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம். 

அங்கு மருத்துவர்களின் அலட்சியத்தால் மரணம் நடக்கிறது. அதனை டெங்கு உட்பட பிற நோய் காரணமாக உயிரிழப்பதாக பதிவு செய்கிறார்கள். இதனால் பலரும் செலவானாலும், கடன் ஆனாலும் பரவாயில்லை. தனியார் மருத்துவமனைக்கு செல்கிறோம் என கூறுகிறார்கள். 

பணம் இருப்பவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். ஏழை எளிய மக்களால் என்ன செய்ய முடியும். மாதம் 2 மரணங்கள் நிகழுகின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என கர்ப்பத்திற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பும் பலரும் எங்களிடம் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள்" என தெரிவித்தனர். 

இந்த அதிர்ச்சி புகார் மதுரை மாவட்ட மக்களை மட்டுமல்லாது, அங்கு சிகிச்சை பெற நினைக்கும் பலரையும் பதறவைத்துள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#madurai #Govt Rajaji Hospital #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story