முன்னாள் மத்திய அமைச்சரின் வீட்டருகே இளைஞர் எரித்து கொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்.!
முன்னாள் மத்திய அமைச்சரின் வீட்டருகே இளைஞர் எரித்து கொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்.!
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் முன்னாள் மத்திய அமைச்சரின் வீட்டருகே இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவா நகர் பகுதியில், துர்நாற்றத்துடன் மர்ம பொருள் எரிந்துகொண்டு இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை அணைத்துள்ளனர்.
அப்போதுதான், ஆணின் சடலம் தீ எரிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளனர். பின்னர், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஆணின் சடலத்தை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், எம்.கே புரம் பகுதியில் வசித்து வரும் அக்னி ராஜ் என்பவர் நள்ளிரவு நேரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளது அம்பலமானது.
அவருடன் இருந்த சிலர் பெட்ரோல் ஊற்றி அக்னி ராஜை தீ வைத்து எரித்து கொலை செய்ததும் சி.சி.டி.வி காட்சிகள் வாயிலாக அம்பலமாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், அக்னி ராஜ் எதற்காக? யாரால்? கொலை செய்யப்பட்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.