தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பல்லடத்தில் பாஜக பிரமுகர், பெங்களூரில் திமுக பிரமுகர்.. பக்கா பிளானுடன் துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.. நெஞ்சை பதறவைக்கும் விபரம்.!

பல்லடத்தில் பாஜக பிரமுகர், பெங்களூரில் திமுக பிரமுகர்.. பக்கா பிளானுடன் துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.. நெஞ்சை பதறவைக்கும் விபரம்.!

Madurai DMK Supporter Murder Attempt In Bangalore  Advertisement

 

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கே குருசாமி (வயது 55). மதுரை மாநகராட்சி மண்டலா திமுக தலைவராக பொறுப்பில் இருக்கிறார். நேற்று முன்தினம் மதுரையில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் சென்ற குருசாமி, நேற்று மாலையில் பெங்களூரில் இருக்கும் கம்மனஹள்ளி பகுதியில் ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டுடன் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளார். 

அந்த சமயம், காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பலானது, குருசாமியை கத்தி-அரிவாள் உட்பட பயங்கர ஆயுதத்தோடு கொடூரமாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளது. படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை மீட்ட அப்பகுதி மக்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளனர். 

madurai

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், பானசாவடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குருசாமியின் மீது மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், முன்விரோத கொலை முயற்சியாக இருக்கலாம் என சந்தேகித்து விசாரணை நடந்து வருகிறது. 

குற்றவாளிகளை கைது செய்ய பெங்களூர் தனிப்படை அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு இருக்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#madurai #DMK Supporter #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story