தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இறந்து கிடந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் 56 லட்சம்!! அவர் யார்னு விசாரித்தபோது காத்திருந்த அதிர்ச்சி..

இறந்துகிடந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் 56 லட்சம் ரூபாய் பணம் இருந்ததும், அவர் யார் என

madurai-beggar-pool-pandi-passed-away Advertisement

இறந்துகிடந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் 56 லட்சம் ரூபாய் பணம் இருந்ததும், அவர் யார் என்பது குறித்த தகவலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வாசலில் முதியவர் ஒருவர் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்துகிடந்தவரின் சடலத்தை சோதனை செய்தபோது, அவர் அந்த பகுதியில் பிச்சையெடுத்துவந்த பூல்பாண்டி என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்துகிடந்த முதியவர் பூல்பாண்டி, தான் பிச்சை எடுத்த பணத்தில் கொரோனா நிவாரண நிதியாக 3 லட்சம் ரூபாயை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தானமாக வழங்கியுள்ளார்.

இதற்காக அவருக்கு சிறந்த சமூக சேவகர் என்ற விருதையும் மாவட்ட ஆட்சியர் கொடுத்துள்ளார். இந்நிலையில் பூல்பாண்டி எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசரனை நடத்திவருகின்றனர். மேலும், அவரது சடலத்தின் அருகே இருந்த அவரது பையை எடுத்து போலீசார் சோதனை செய்ததில், அவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக தனது வங்கியில் இருந்து 36 லட்ச ரூபாய் பணத்தை மொத்தமாக எடுத்திருந்ததும், அதைத்தவிர, தற்போது அவருடைய வங்கிக் கணக்கில் 20 லட்சம் ரூபாய் பணம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

மேலும் அவர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பேராசிரியராக இருந்த அவர், பிச்சை எடுக்கும்நிலைக்கு தள்ளப்பட்டது ஏன்? அவரின் இந்த நிலை குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Madurai beggar pool pandi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story