#சற்றுமுன்: மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்..! உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!
#சற்றுமுன்: மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்..! உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!
தமிழக மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. சமீபத்தில், புதுச்சேரியில் இருந்து தமிழ்நாடுக்கு ஒன்றரை லிட்டர் மது கொண்டு வந்ததாக தொடர்பான ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுவை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அதிகபட்சம் 4.5 லிட்டர் வரை புதுச்சேரியில் இருந்து தமிழ்நாடுக்கு கொண்டு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் தமிழக மது பிரியர்கள் மகிழ்ச்சியுடன் அந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக கடலூர் மற்றும் சென்னை வாசிகள் மத்தியில் இந்த தீர்ப்புக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: இவர்தான் பிக் பாஸ் 9 டைட்டில் வின்னரா? ரசிகர்களின் கணிப்புப்படி இவருக்கு தானா.....! வெளியான தகவல்!
மேலும், நீதிமன்றம் தெளிவாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுவிற்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் - திரிஷா சர்ச்சை.. அந்த காரை இப்போ யாரு வச்சிருக்கா? - விமலின் நக்கல் பதில்.!