×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"தந்தையின் ஓய்வூதியத்தில்.. மகளுக்கும் உரிமை.!" உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

தந்தையின் ஓய்வூதியத்தில்.. மகளுக்கும் உரிமை.! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Advertisement

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விதமான தீர்ப்பு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கி உள்ளது. மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சுதந்திரப் போராட்ட வீரர்களின் விவாகரத்து பெற்ற மகள்களுக்கு உரிமை வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு தான் அது. 

இது குறித்த வழக்கை ஒரு விடுதலை போராட்ட வீரரின் விவாகரத்தான மகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தந்தை இறந்தபின் அவருடைய வாரிசாக ஓய்வூதியம் பெற வேண்டி அவர் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், அதிகாரிகள் அவர் ஒரு திருமணமான பெண் என்ற காரணத்தால் அவருக்கு இதில் உரிமை கிடையாது என்று கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரித்து இருக்கின்றனர். 

இதனை தொடர்ந்து, அந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி தனக்கான நீதியை கேட்டுள்ளார். இதுகுறித்த தீர்ப்பில் உயர்நீதிமன்ற நீதிபதி, "திருமணம் ஆன பெண்ணிற்கு ஓய்வூதிய உரிமை இல்லை என்று மத்திய அரசு கூறும் காரணம் நியாயமற்றது.

இதையும் படிங்க: "பரபரப்பு தீ...ர்ப்பு.."! "ஆளுநருக்கு ஏது அதிகாரம்.."? கிடப்பில் கிடந்த தீர்மானங்கள்.! உரிமையை வென்றெடுத்த மாநில அரசு..!

விவாகரத்திற்கு பின் அந்தப் பெண் மீண்டும் தனியாக வாழ்கின்ற நிலைக்கு தள்ளப்படுகிறார். அவர் பெற்றோரின் பொறுப்புகளுக்கு ஆளானவர். எனவே, அவருக்கு தந்தையின் ஓய்வூதியத்தை வழங்க வேண்டிய உரிமையை கொடுப்பது அவசியம். 

மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு இன்னமும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதை மத்திய அரசு நீக்க வேண்டும்." என்று வலியுறுத்தி இருக்கிறார். மேலும், திருமணம் ஆன பெண்களுக்கு தந்தையின் ஓய்வூதியத்தில் உரிமை இல்லை என்ற விதிமுறையை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், விவாகரத்தான பெண்கள் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெறாதவர்களாக இருக்கலாம்., அவர்களுக்கு விடுதலைப் போராட்ட வீரரின் குடும்ப உறுப்பினராக ஓய்வூதியத்தை பெரும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார். 

இந்த தீர்ப்பு வரும் காலங்களில் சமூகத்தில் பெரிய மாற்றத்தை கொடுக்கக் கூடியதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு வாழ்வாதார உரிமையை மீட்டெடுக்கும் விதமாக இந்த தீர்ப்பு அமையும் என்று பலரும் இதற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "தள்ளிப்படுக்க எதுக்குடா கல்யாணம்?" கணவரை ஆள் வைத்து அடித்த மனைவி.. கணவன் அதிர்ச்சி முடிவு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#madras hc #pension law #Central Govt
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story