திடீரென ஏரியில் கேட்ட அலறல் சத்தம்! இரவு முழுவதும் சேற்றில் சிக்கி தவித்த இளைஞர்! ஓடிச்சென்று உள்ளூர் மக்கள் உதவியுடன் உயிரைக் காப்பாற்றிய மா.சுப்பிரமணியன்.... வைரல் வீடியோ!!!!
வேடந்தாங்கல் ஏரியில் புதைசேற்றில் சிக்கி இரவு முழுவதும் தவித்த இளைஞரை முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், வேடந்தாங்கல் ஏரியில் புதைசேற்றில் சிக்கி இரவு முழுவதும் தவித்த இளைஞர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நடைப்பயிற்சிக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், உதவிக்கான குரலைக் கேட்டு உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்.
ஏரியில் இருந்து கேட்ட உதவி குரல்
திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வழக்கறிஞர் பரந்தாமனை ஆதரித்து மா.சுப்பிரமணியன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று காலை வேடந்தாங்கல் ஏரிப் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, ஏரியின் ஒரு பகுதியிலிருந்து உதவிக்கான குரல் கேட்டுள்ளது.
இதையும் படிங்க: என்ன நினைச்சாரோ? தந்தையின் அன்பு இதுதான்.. திடீரென கண்கலங்கிய முதல்வர் விஜய்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!
இதையடுத்து சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்ற அவர், புதைசேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த இளைஞரைப் பார்த்தார். இரவு முழுவதும் அங்கேயே சிக்கியிருந்ததாக கூறப்படும் அந்த இளைஞர், மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார்.
உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மா.சுப்பிரமணியன், அப்பகுதி மக்களின் உதவியுடன் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினார். நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு புதைசேற்றில் சிக்கியிருந்த இளைஞரை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.
மீட்கப்பட்டவருக்கு அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இளைஞர் மீட்பு பணியில் உள்ளூர் மக்களும் உடனிருந்து உதவினர்.
மருத்துவமனையில் நேரில் விசாரித்த மா.சுப்பிரமணியன்
இதையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்ற மா.சுப்பிரமணியன், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் தற்போதைய நிலை குறித்தும் மருத்துவர்களிடம் விரிவாக விசாரித்தார்.
ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை உரிய நேரத்தில் மீட்க நடவடிக்கை எடுத்ததற்காக அவரது குடும்பத்தினர் மா.சுப்பிரமணியனுக்கு நன்றி தெரிவித்தனர். வேடந்தாங்கல் ஏரியில் நடந்த இந்த மீட்பு நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சற்று முன்... பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் வீரமணிக்கு சொந்தமான இடங்களில் அதிரடி ரெய்டு...!!!