தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதல் திருமணம்.. 3 மாதத்தில் கசந்துபோன திருமண வாழ்க்கையால் பெண் எடுத்த விபரீத முடிவு.!

காதல் திருமணம்.. 3 மாதத்தில் கசந்துபோன திருமண வாழ்க்கையால் பெண் எடுத்த விபரீத முடிவு.!

Love marriage.. The tragic decision taken by the woman because of her married life that was spoiled in 3 months.! Advertisement


புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் அருகே மலைகுடிபட்டி வடக்கிபட்டியில் வெங்கடேசன் அவரது மனைவி தெய்வானையுடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த மூன்று மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே தெய்வானை மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் காதல் திருமணம் செய்தும் வாழ்க்கை தான் எதிர்பார்த்தது போல சந்தோஷத்தை கொடுக்கவில்லை என்று தெய்வானை விரக்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

love marriage

இதனால் தெய்வானை தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தெய்வானை தூக்கில் தொங்கி உயிரிழந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர்  இலுப்பூா் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் தெய்வானையின் சடலத்தை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இலுப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருமணமாகி மூன்று மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#love marriage #Sucide #Investigation #
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story