×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தங்கையுடன் காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்... இளைஞர் வெட்டி கொலை.!! தந்தை, அண்ணன் கைது.!!

தங்கையுடன் காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்... இளைஞர் வெட்டி கொலை.!! தந்தை, அண்ணன் கைது.!!

Advertisement

சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பூமிநாதன் என்பவரின் மகன் தமிழரசன் வயது (26) தமிழரசன் அதே கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்களுடன் ஊருக்கு அருகேயுள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் மது அருந்தி உள்ளார்கள். அந்த நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக 5 பேர் தமிழரசனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பித்துள்ளனர். இச்சம்பவத்தையறிந்த போலீசார் உயிரிழந்த தமிழரசனின் உடலை மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்,   

இந்த சம்பவம் பற்றி புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல் கட்ட விசாரணையில், தமிழரசனுக்கு தங்கை உறவுமுறை கொண்ட பெண்ணை காதல் செய்துள்ளார். அதனையறிந்த உறவினரான சங்கர பாண்டியன் என்பவர் காதலை கைவிடுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் தன் காதலை கைவிட மறுத்ததால், சங்கர பாண்டியன் அவரது சில நண்பர்களுடன் சேர்ந்து தமிழரசனை படுகொலை செய்துள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். 

தங்கை உறவுமுறை கொண்ட பெண்ணை காதலித்த தமிழரசன் (26) என்ற  வாலிபரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொலை செய்த பெண்ணின் தந்தை சுரேஷ், மகன் சங்கர பாண்டியன் உறவினர்கள் மற்றும் நண்பரான ரஞ்சித் குமார், முத்தபாண்டியன், சங்கர், செல்வம், மணிகண்டன் ஆகிய 7 பேரையும் எம்.புதுப்பட்டி போலீசார் மூலம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருதுநகரிலுள்ள மாவட்ட சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: போதை வெறியில் மகன் படுகொலை.!! தந்தை சரண்.!!

இதையும் படிங்க: நெல்லையில் பயங்கரம்... காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை.!! 3 சிறுவர்கள் கைது.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sivakasi #Crime #Murder #Love Affair #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story