"மருமகளுடன் இருந்த தகாத உறவை நிறுத்தி விடு... " எச்சரித்த மாமனார்.!! அடித்தே கொலை செய்த கள்ளக்காதலன்.!!
மருமகளுடன் இருந்த தகாத உறவை நிறுத்தி விடு... எச்சரித்த மாமனார்.!! அடித்தே கொலை செய்த கள்ளக்காதலன்.!!
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சேலூர் நாடு ஊராட்சி, பள்ளிக்குழிப்பட்டியில் விவசாயி செல்வராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் காசி துரைசாமி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட செல்வராஜ் (55) பள்ளிக்குழிப்பட்டி பகுதியை சேர்ந்தவர். இவர் ஒரு விவசாயி. இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் செல்வராஜ் வீட்டிற்கு அடிக்கடி வரும் உறவுக்காரரான காசி துரைசாமிக்கு விஜயகுமாரின் மனைவி சந்திராவுடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் இருவரும் தகாத உறவு முறையில் இருந்துள்ளனர்.
இதையறிந்த விஜயகுமார் மன வருத்தப்பட்டு தந்தை செல்வராஜனிடம் தெரிவித்துள்ளார். மகனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்த செல்வராஜ், காசி துரைசாமியை கண்டித்துள்ளார். மேலும் தனது மருமகளுடனான உறவை நிறுத்திக் கொள்ளுமாறு பலமுறை கூறியுள்ளார். ஆனால் இதனை காசி துரைசாமி காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் பள்ளிக்குழிப்பட்டி அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது மது அருந்திவிட்டு அந்தப் பக்கம் வந்த துரைசாமியை அழைத்து மருமகளுடன் வைத்துள்ள உறவை கைவிடுமாறு மறுபடியும் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அடிதடியாக மாறியது.
ஆத்திரத்தில் செல்வராஜை அருகிலிருந்த விறகு கட்டையை எடுத்து காசி துரைசாமி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு புகாரளிக்கப்பட்டு காசி துரைசாமி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!