×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்திய பிறகும் வேகமெடுக்கும் கொரோனா.! மேலும் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்.!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் இரண்டாவது அலையாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும்,

Advertisement

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் இரண்டாவது அலையாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும், கொரோனா பரவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமெடுத்துவருவதால் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு அமல்படுத்திய பிறகும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிற்பகல் தலைமைச்செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்

அதில், முழு ஊரடங்காக இல்லாமல்  பணி நேரம், குறைப்பு, பணியாளர்கள் எண்ணிக்கை ஆகிய வற்றிற்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம். கூட்டம் அதிகமாக கூடும் வாரச்சந்தைகள் உள்ளிட்டவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 

(work from home) வீட்டில் இருந்தே பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்படலாம் எனவும் கூறப்பட்டது. இந்தநிலையில், தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதில், பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை எனவும், மாநகராட்சிகள், நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகள் இயங்க அனுமதியில்லை எனவும், புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோல்ப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை. சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது எனவும், இறுதி சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் வழக்கம்போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #Lock down
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story