×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டிற்குள் புகுந்து படுத்திருந்த நாயை கவ்விய சிறுத்தை! பதறவைக்கும் வீடியோ காட்சி!

Leopard bite a dog

Advertisement


ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் தாளவாடி அருகே ஒரு சிறுத்தை வீட்டிற்குள் புகுந்து வீட்டின் வாசலில் படுத்திருந்த நாயை கவ்வியுள்ளது. 

தாளவாடி ஆசானுர் காட்டேஜில் நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த மதம் 29 ஆம் தேதி அந்த காட்டேஜிற்குள் சிறுத்தை புகுந்துள்ளது. அப்போது வீட்டின் முன்பு கருப்பு நிறமுடைய நாய் படுத்து உறங்குகிறது. அப்போது அந்த சிறுத்தை நாயின் கழுத்துப்பகுதியை கவ்வியுள்ளது. திடீரென சுதாரித்துக்கொண்ட அந்த குலைத்துக்கொண்டே தப்பியோடியது.  

அதிக சத்தத்துடன் குலைத்துக்கொண்டே எழுந்து ஓடும் அந்த நாயை சிறுத்தை துரத்தும் காட்சியும்  சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது.  இந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Leopard #dog
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story