×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Watch: திருஷ்டி கழித்த எலுமிச்சையால் வந்த வினை.. கோவையில் களேபரம்.!

காருக்கு திருஷ்டி சுற்றிய எலுமிச்சை பழத்தை பக்கத்து வீட்டில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

கோவையில் புதிய காருக்கு திருஷ்டி சுற்றியபோது எலுமிச்சை பழத்தை அருகிலுள்ள வீட்டின் முன் வீசியதால் இரு குடும்பங்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.

புதிய கார் உட்பட வாகனங்கள் வாங்கும்போது எலுமிச்சை வைத்து திருஷ்டி சுற்றி வாகனத்தை இயக்குவது தமிழ் மரபில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே  இந்த திருஷ்டி சுற்றும் செயலால் இரு குடும்பத்தினர் சரமாரியாக தாக்கி சண்டையிட்ட சம்பவம் கோவையில் நடந்துள்ளது. 

புதிய காருக்கு திருஷ்டி சுற்றிய குடும்பம்:

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை பகுதியில் புதிதாக வாங்கிய காருக்கு ஒரு குடும்பத்தினர் திருஷ்டி சுற்றி இருக்கின்றனர். அப்போது எலுமிச்சம் பழத்தை தூக்கி வீசிய நிலையில், அது அருகில் இருந்த வீட்டின் வெளியே சென்று விழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் இருதரப்பினரிடையே மோதலாக மாறி இருக்கிறது. 

இதையும் படிங்க: ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!

பக்கத்து வீட்டுக்காரருடன் கைகலப்பு:

திருஷ்டி சுற்றப்பட்டு வீசப்படும் எலுமிச்சை, பூசணி போன்றவை கண்களில் பட கூடாது என பலரும் நினைப்பர். இந்த நிலையில், திருஷ்டி கழிக்கப்பட்ட எலுமிச்சை வீட்டின் வெளியே வீசப்பட்டதால் கைகலப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூகவலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

தொடரும் சம்பவங்கள்:

இன்றளவிலும் கிராமப்புறங்களில் திருஷ்டி சுற்றி பூசணிக்காய் உடைப்பது, ஆரத்தி எடுப்பது என பல விதமான செயல்கள் தொடர்ந்து வருகின்றன. இதனால் ஒரு சில நேரங்களில் விபத்துகளும் நடந்துள்ளன.


Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore #கோவை #திருஷ்டி #எலுமிச்சை #Lemon Fight
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story