×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சட்டக் கல்லூரி மாணவி கர்ப்பம்... வக்கீல் நண்பன் உள்ளிட்ட 4 பேர் கைது.!!

சட்டக் கல்லூரி மாணவி கர்ப்பம்... வக்கீல் நண்பன் உள்ளிட்ட 4 பேர் கைது.!!

Advertisement

இளம்பெண்ணை பலமுறை உடலுறவு இச்சைகளுக்கு ஆளாக்கி திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து ஏமாற்றிய வழக்கறிஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டி வ.உ.சி நகர் பகுதியியை சேர்ந்த மணிவண்ணனின் மகன் சுரேந்தர்(28). இவர் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் நாமக்கல் சட்டக் கல்லூரியில் படித்த போது  இளம் பெண்ணுடன்  சுரேந்தருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலராக வலம் வந்தனர்.

இதையடுத்து மாணவி காதலித்த நபருடனே ஜூனியராக பணியாற்றத் தொடங்கினார். இருவரும் ஏற்காட்டிற்கு சென்று ரூம் எடுத்து தனிமையில் இருந்துள்ளனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை பலமுறை பாலியல் இச்சைகளுக்கு  ஆளாக்கியுள்ளார். இப்படியே தொடர்ந்து அலுவலகத்திலும் மாணவியுடன் உல்லாசத்தில் இருந்துள்ளார். இதனால் கர்ப்பமடைந்த மாணவியை சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளார்.

இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... 17 வயது சிறுமி கர்ப்பம்.!! கல்லூரி மாணவர் கைது.!!

கடந்த மே மாதம் மாணவி சட்டப் படிப்பை முடித்த பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுரேந்தரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார்.  இதனால் மனமுடைந்த மாணவி அருகிலுள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார். இதற்கடுத்து சுரேந்தரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது பெற்றோரான மணிவண்ணன், வசந்தா, நண்பர் கபில் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் சட்டக் கல்லூரி மாணவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி மாணவிகள் கூட்டு பலாத்காரம்... ஆட்டோ டிரைவர்கள் மீது போக்சோ வழக்கு.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #namakkal #Crime #sexual abuse #Lawyer Arrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story