மக்களின் கோரிக்கையை ஏற்று குறைந்துவரும் தங்கத்தின் விலை..! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Latest gold rate in Chennai

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை அதிகரித்துவந்தநிலையில் தற்போது மீண்டும் சற்று குறைய தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா தாக்கம், பொருளாதார மந்தநிலை போன்ற பல காரணங்களால் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து ஒருக்கட்டத்தில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது. இதனால் திருமண ஏற்பாடு செய்துவந்த மக்கள் தங்கத்தின் விலை ஏற்றதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தங்கத்தின் விலை குறையாதா என்ற ஏக்கத்தில் மக்கள் காத்திருக்க, மக்களின் கோரிக்கை ஏற்று தற்போது தங்கத்தின் விலை சற்று குறைய தொடங்கியுள்ளது. இன்றிய நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.232 குறைந்து, ரூ.40,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.29 குறைந்து, ரூ.5,071 ஆக உள்ளது.
அதேபோல் வெளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.74.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து, ரூ.74,100 ஆகவும் விற்கப்படுகிறது.