"பார்க்கிங் தகராறு... " அண்ணி மண்வெட்டியால் அடித்து கொலை.!! முன்னாள் ராணுவ வீரர் கைது.!!
பார்க்கிங் தகராறு... அண்ணி மண்வெட்டியால் அடித்து கொலை.!! முன்னாள் ராணுவ வீரர் கைது.!!
குமரி மாவட்டம் அருகே காரை நிறுத்த இடையூறாக இருந்ததற்காக சொந்த அண்ணியை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் அருமனை அருகே மாறப்பாடி பறையன்விளை பகுதியில் 53 வயது வசந்தா தனது 3 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவன் கிருஷ்ணசாமி 10 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பிரகலாதன். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்
தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் தம்பியாவார். சில நாட்களாக இந்த இரு குடும்பங்களுக்கிடையே பாதை சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்தது.
சமீபத்தில் பிரகலாதன் ஒரு கார் வாங்கியுள்ளார். இந்த காரை நிறுத்துவதற்கு 3 அடி அளவில் பாதை குறுகலாக இருந்தது. இதனால் பாதையை விரிவாக்கம் செய்ய பிரகலாதன் முயன்றுள்ளார். இதனால் காரை தெருவிலேயே நிறுத்தி வந்துள்ளார். காரை நிறுத்துவதற்கு இடையூறாகயிருக்கும் அண்ணியான வசந்தாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று வசந்தா தனது வீட்டினுள் சமையல் செய்துள்ளார். அப்போது உள்ளே நுழைந்த பிரகலாதன் வீட்டிலுள்ள பாத்திரங்களை கீழே போட்டு சேதப்படுத்தியுள்ளார். மேலும் கையில் மண்வெட்டியை வைத்திருந்த அவர் கோபத்தில் வசந்தாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதையும் படிங்க: விபத்தில் உயிரிழந்த கண்டக்டர்.! விசாரணையில் அம்பலமான மனைவியின் மாஸ்டர் பிளான்.! திடுக் சம்பவம்!!
இதனால் மயக்கமடைந்த வசந்தாவை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு வசந்தாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையிலும் வசந்தா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரகலாதனை பிடித்து சிறையிலடைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறில் நடந்த கொடூரம்... பஸ் ஸ்டாண்டில் இளம் பெண் குத்தி கொலை.!! 2-வது கணவனின் கோரமுகம்.!!