லாட்டரியில் பணம் விழும்..! அரசாங்க வேலையும் வாங்கி தரும் கார்மேக சித்தர்..! சித்தரை நோக்கி படையெடுக்கும் மக்கள்.!
Krishnagiri god man news viral

சித்தர் என்ற பெயரில் அருள் வாக்கு கூறுவதாக கூறி மக்கள் மத்தியில் பிரபலமாகிவருகிறார் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி என்னும் பகுதியை சேர்ந்தவர் பிரபு. ட்ராக்டர் மெக்கானிக்காக வேலைபார்த்துவந்த இவர் தற்போது மக்கள் தேடி வரும் கார்மேகச் சித்தராக அவதாரம் எடுத்துள்ளார்.
இளைஞர் ஒருவரின் தலை மீது வைக்கப்பட்டுள்ள பலகையில் ஏறி நின்று தன்னை தேடி வருபவர்களுக்கு ஆவேசமாக அருள் வாக்கு கூறி வருகிறார் இந்த கார்மேக சித்தர். அரசு வேலை வாங்கி தருகிறேன், லாட்டரியில் பணம் விழ வைக்கிறேன் எனக் கூறி ஆயிரக் கணக்கில் கார்மேகச் சித்தர் பணம் வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு சாதாரண குடிசையில் தொடங்கிய இந்த அருள் வாக்கு தற்போது பெரிய கட்டிடமாக உருமாறியுள்ளது. இவரை பார்க்க மக்கள் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறதாம்.
அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்றும், தடை செய்யப்பட்ட லாட்டரியில் பணம் விழ வைக்கிறேன் என்றும் சாமியார் ஒருவர் அரங்கேற்றி வரும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.