தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: கார் இரண்டாக வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம்.. கோவைக்கு புறப்பட்ட டிஜிபி சைலேந்திரபாபு..!!

#Breaking: கார் இரண்டாக வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம்.. கோவைக்கு புறப்பட்ட டிஜிபி சைலேந்திரபாபு..!!

Kovai car blast issue Advertisement

கோயில் முன்பாக நின்றிருந்த மாருதி கார், இன்று அதிகாலை திடீரென வெடித்து சிதறியது. அதில் உயிரிழந்த நபர் யார்? என்று கண்டறியப்படாததால், சென்னையில் இருந்து டிஜிபி சைலேந்திரபாபு கோவைக்கு விரைந்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக நின்றிருந்த மாருதி கார், இன்று அதிகாலை திடீரென வெடித்து சிதறியது. இச்சம்பவத்தில் காரில் இருந்த நபர் உடல்கருகி உயிரிழந்ததை தொடர்ந்து, சத்தம் கேட்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் தீயணைப்புபடையினர், காவல்துறைக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் காரில் பொருத்தப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக சிதறியது தெரியவந்தது. காரில் இருந்தவர்களின் உடல் முழுவதும் கருகிய நிலையில் மீட்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

kovai

அத்துடன் ஈஸ்வரன் கோவில் வீதிக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தை தொடர்ந்து கைரேகை நிபுணர்களும், வெடிகுண்டு தடுப்புபிரிவு போலீசாரும், மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த நபர் யார்? என்று இதுவரை கண்டுபிடிக்க கண்டறியப்படாததால், சென்னையில் இருந்து டிஜிபி சைலேந்திரபாபு கோவைக்கு விரைந்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kovai #Car blast #டிஜிபி #சென்னை #கோவை #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story