கஜா: வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் 10 கோடி நிவாரண நிதி! கமல் பெருமிதம்
Kerala CMO announced 10 crore Gaja relief fund
கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் பெருமளவில் சேதம் ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருக்கிறது.
நிவாரண உதவிக்காக பலர் தமிழக அரசின் மூலமாகவும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், கேரள முதல்வருக்கு கஜா புயல் நிவாரண உதவி கேட்டு கடிதம் ஒன்றை நேற்று அனுப்பினார்.
அந்த கடிதத்தில் கமல், "அண்மையில் வீசிய கஜா புயல், தமிழக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி, கேரள அரசினையும் மக்களையும் தங்களால் இயன்ற உதவிகளை தமிழ்நாட்டிற்கு இப்போது அளித்திட முன் வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறது. இப்பேரிடர் காலங்களில் மனிதாபிமான உணர்வகள் மக்களிடம் அதிகமாக மேலோங்கிட வேண்டும்" என உருக்கமாக எழுதியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த கேரள அரசு கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு கேரள அரசு சார்பாக ரூபாய் 10 கோடி அளிப்பதாக அறிவித்துள்ளது.