×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பரபரப்பு.... தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்களை தடுக்க அரசு அனுமதியோடு விபச்சார விடுதிகள் செயல்பட வேண்டும்! காயல் அப்பாஸ் சர்ச்சை பேச்சு.!!!

திருவள்ளூரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த காயல் அப்பாஸ், பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசு அனுமதியுடன் விபச்சார விடுதிகள் செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசு அனுமதியுடன் விபச்சார விடுதிகள் செயல்பட வேண்டும் என்ற அவரது கருத்து அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த காயல் அப்பாஸ், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், குற்றவாளிகளுக்கு எந்த சூழலிலும் பிணை வழங்கக்கூடாது என்றும், அவர்கள் சாகும் வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: “இது தமிழகமா? சுடுகாடா?” ரத்த ஆராய் தமிழகம்.... இன்று பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரில்....5 குற்றங்களை அடுக்கி திமுக அரசின் மீது அதிரடி கண்டனம்!!!

விபச்சார விடுதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து

தனது அறிக்கையில், கொல்கத்தாவின் சோனா காச்சி மற்றும் மும்பையின் கிராண்ட் ரோடு போன்ற பகுதிகளில் அரசு அனுமதியுடன் விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாகவும், அதனால் அங்குப் பாலியல் குற்றங்கள் குறைவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் தமிழ்நாட்டின் முக்கிய மாநகரங்களிலும் அரசு அனுமதியுடன் இத்தகைய விடுதிகள் செயல்பட்டால் மட்டுமே பாலியல் குற்றங்கள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட முடியும் என்று அவர் கூறியுள்ளார். இந்த கருத்தே தற்போது பல்வேறு தரப்பினரிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை

இதையடுத்து, தமிழ்நாட்டில் இனி இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சட்டம்-ஒழுங்கு அமைப்புகள் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: மறுபடியும் காவி பெயிண்ட்டா? தட்டி கேட்காமல் மியூட்-ல முதல்வர் இருக்காரு.... ஆக்ரோஷமாக அரசுக்கு நேரடி கேள்வி விட்ட உதயநிதி ஸ்டாலின்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kayal Abbas #பாலியல் குற்றங்கள் #Tamil Nadu News #Gummidipoondi #Women safety
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story