#BREAKING: தமிழகத்தை உலுக்கிய கவின் ஆணவக்கொலை.. சுர்ஜித்தின் தாயார் அதிரடி கைது.. கதறியழுத எஸ்ஐ..!
Kavin Murder Case: காவல் உதவி ஆய்வாளர் ஆவணக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கவின் ஆணவக்கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பெண் எஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆணவக்கொலை விவகாரம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது ஐடி ஊழியர் கவின், காதல் விவகாரத்தில் பெண்ணின் பெற்றோர், உறவினர்களால் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தமிழக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் கவினின் காதலியின் சகோதரர் சுர்ஜித், தந்தை சரவணன், உறவினர் ஜெயபால் என 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: காதல் திருமணத்தால் கோபம்? மருமகனை காலி செய்த மாமனார்.. வன்மத்துடன் வெறிச்செயல்.!
அதிரடி கைது:
அதனைத்தொடர்ந்து, சுர்ஜித்தின் தாயாரான கிருஷ்ணகுமாரி தேடப்பட்டு வந்தார். இவர் காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பில் இருந்து வந்த நிலையில், 10 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், சிபிசிஐடி காவல்துறையினர் கிருஷ்ணகுமாரியை அதிரடியாக கைது செய்துள்ளனர். இவரை நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆட்சி மாற்றத்துக்குப்பின் அதிரடி:
கைது நடவடிக்கைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கிருஷ்ணகுமாரி, கதறி அழுதபடி முகத்தை மூடிக்கொண்டு சென்றார். கடந்த 10 மாதமாக சுர்ஜித்தின் தாயார் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில், ஆட்சி மாற்றத்துக்கு பின் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: விளாத்திகுளம் மாணவி வன்கொடுமை & கொலை விவகாரம்.. சிக்கலில் +2 மாணவர்.. பகீர் தகவல்.!