×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குளியல் வீடியோ எடுத்து ஆசிரியை மிரட்டி பலாத்காரம்.. குமரியில் பகீர் சம்பவம் அம்பலம்.! 

Kanyakumari News: பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த கொடுமை குமரியில் அரங்கேறி இருக்கிறது. 

ரகசிய வீடியோ: 

Bathing Video Blackmail: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த 36 வயது ஆசிரியை, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், "தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் எனது கணவர் டெம்போ ஓட்டுநராக இருக்கிறார். நான் வீட்டில் குளித்துக்கொண்டு இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவர் அதனை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். 

இதையும் படிங்க: மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த 20 வயது இளைஞன்.. ஸ்கெட்ச் போட்ட தம்பதி.. அரங்கேறிய சம்பவம்.!

வன்கொடுமை: 

இந்த விஷயத்தை கவனித்து நான் கூச்சலிட்டதும் அவர் தாபித் சென்ற நிலையில், போனில் தொடர்புகொண்டும், வெளியே சென்றாலும் என்னை பின்தொடர்ந்து நடந்ததை யாரிடமும் கூறக்கூடாது. கூறினால் கொலை செய்வேன் என மிரட்டினார். இதனால் பயத்தில் நானும் எதுவும் சொல்லவில்லை. இதனை சாதகமாக்கிக்கொண்டவர் தனியாக நான் வீட்டில் இருந்தபோது மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். 

நண்பரும் வன்கொடுமை: 

விடியோவை அழித்துவிடுகிறேன் என பலமுறை என்னை கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்தார். இந்த காட்சிகளையும் எனக்கு தெரியாமல் வீடியோ பதிவு செய்து வைத்துள்ளார். என்னிடம் ரூ. 47 ஆயிரம் பணமும் மிரட்டி வாங்கிக்கொண்டார். ஜெயகாந்தன் வெளிநாட்டுக்கு சென்றுவிட்ட நிலையில், அவரின் நண்பர் ஜெகன் ஜெயகாந்தனிடம் இருந்த தகவலை அறிந்து என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார். இதுகுறித்து கணவரிடம் தெரிவித்தபோது, அவரையும் மிரட்டி வருகின்றனர்". இவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

விசாரணை:  

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடவே, ஜெயகாந்தன், ஜெகன் ஆகியோரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதையும் படிங்க: கத்தி முனையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே இப்படியா? பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி மீது பகீர் புகார்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kanyakumari #Crime news #sexual abuse #Teacher Rape
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story