×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யார் இப்படி பண்ணது..? முல்வேலியில் கட்டியிருந்த மூட்டையிலிருந்து வீசிய துர்நாற்றம்! மூட்டையை அவிழ்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி...! கொடூர சம்பவம்..!!!

கன்னியாகுமரி அருமனை அருகே சாக்கு மூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நாய் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சாக்கு மூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நாய் ஒன்று அழுகிய சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மடத்துவிளை பகுதியில் உள்ள அண்ணாசித் தோட்டத்தின் முள்வேலியில் கட்டப்பட்டிருந்த அந்த மூட்டையிலிருந்து கடந்த சில நாட்களாக கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து சந்தேகமடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சாக்கு மூட்டையிலிருந்து வீசிய துர்நாற்றம்

புத்தன்துறை அருகே மடத்துவிளை பகுதியில் உள்ள அண்ணாசித் தோட்டத்தில் முள்வேலியில் ஒரு சாக்கு மூட்டை கட்டப்பட்டிருந்தது. அதிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசியதால், அதற்குள் மனித உடல் இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அருமனை காவல் நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 6 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்! விக்கல் வந்து செத்ததாக கூறிய நாத்தனார்கள்..! ஆனால்... விசாரணயில் அம்பலமான அதிர்ச்சி உண்மை! புதுக்கோட்டையில் நடந்த பகீர் சம்பவம்..!!!

மூட்டையை அவிழ்த்த போலீசாருக்கு அதிர்ச்சி

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பொதுமக்கள் முன்னிலையில் சாக்கு மூட்டையை அவிழ்த்து சோதனை செய்தனர். அப்போது அதற்குள் ஒரு நாய் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கிலிடப்பட்டு இறந்திருந்தது தெரியவந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

விலங்கு கொடுமை குறித்து விசாரணை கோரிக்கை

நாயை இவ்வாறு கட்டி தூக்கிலிட்டு கொன்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாயில்லா ஜீவனை கொடூரமாக துன்புறுத்தி கொன்ற நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: மக்களே வெளியே வராதீங்க..! இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கன்னியாகுமரி நாய் சடலம் #Arumanai Dog Case #மடத்துவிளை சம்பவம் #விலங்கு கொடுமை #Kanyakumari News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story