×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்ஸ்டா மூலம் பழக்கம்! வாடகை வீட்டில் அடிக்கடி உள்ளாசம்! திடீரென காணாமல் போன காதலி! சூட்கேசில் அடைத்து.... திடுக்கிடும் சம்பவம்!

கான்பூரில் காதல் விவகாரம் கொலையில் முடிந்தது: அகன்ஷாவை காதலன் சூரஜ்குமார் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து யமுனா நதியில் வீசிய அதிர்ச்சி சம்பவம்.

Advertisement

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சி கொலை சம்பவம் தற்போது சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலராக வாழ்ந்து வந்த பெண்ணை வக்கிரமமாகக் கொன்று சூட்கேஸில் அடைத்து நதியில் வீசிய சம்பவம் மக்கள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலிலிருந்து தகராறு வரை

கான்பூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சூரஜ்குமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அகன்ஷா, இன்ஸ்டா மூலம் பழகி காதலர்களாக மாறினர். இருவரும் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். ஆனால், அகன்ஷாவின் தாயார் தனது மகள் காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.

சந்தேகத்திற்கு இடமளித்த விசாரணை

போலீசார் முதலில் சூரஜ்குமாரை விசாரிக்கையில், "என்னுடன் தான் இருந்தார், பின்னர் எங்கு சென்றார் தெரியவில்லை" என்று தெரிவித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த தீவிர விசாரணையில், சூரஜ்குமார் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது, இதை அகன்ஷா எதிர்த்து கேள்வி எழுப்பியதும், தொடர்ந்து தகராறுகள் ஏற்பட்டதும் வெளிச்சம் பார்த்தது.

இதையும் படிங்க: கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி! 4 வயது குழந்தை திடீரென மயங்கி விழுந்து! பிரேத பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி ! பதறவைக்கும் சம்பவம்...

கொலைக்கு வழிவகுத்த சண்டை

அகன்ஷா, சூரஜ்குமாரை அந்த உறவை கைவிட்டு தன்னுடன் திருமணம் செய்ய வற்புறுத்தியதால், சண்டை அதிகரித்தது. கோபத்தில் சூரஜ்குமார், தனது காதலி அகன்ஷாவை  தலையை பிடித்து சுவரில் அடித்து, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர் உடலை ஒரு பெரிய சூட்கேஸில் அடைத்து, யமுனா நதியில் வீசியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் நடவடிக்கை

இந்த கொடூரச் சம்பவம் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சூரஜ்குமார் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த காதல் கொலை வழக்கு சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

காதல் உறவுகள் புரிதலின்றி வன்முறையாக மாறும்போது அதன் விளைவுகள் எவ்வளவு கொடூரமாக மாறும் என்பதை இந்த சம்பவம் தெளிவாக காட்டுகிறது. சமூகத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.

 

இதையும் படிங்க: ஊரு விட்டு ஊரு போய் கணவனை கொள்ள பக்கா பிளான் போட்ட மனைவி! மயங்கி விழுந்து கணவன்..... திடுக்கிடும் சம்பவம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கான்பூர் #Love Murder #சூரஜ்குமார் #அகன்ஷா #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story