×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அம்மாவுக்கு விடுதியில் உள்ள மகளிடம் இருந்து வந்த அழைப்பு! இது ஒரு மோசமான பள்ளி அம்மா.... சில நிமிடங்களில் விடுதியில் உள்ள சிறுமிக்கு நடந்த அதிர்ச்சி! கதறும் பெற்றோர்.!!!

காஞ்சிபுரம் ஓரிக்கை தனியார் பள்ளி விடுதியில் 11-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டிய நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த 11-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசாரும் பள்ளிக்கல்வித்துறையும் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளன.

தாயிடம் பேசிய சில நிமிடங்களில் நடந்த சோகம்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் - மகாலட்சுமி தம்பதியரின் மூத்த மகளான மாணவி, காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர் சென்னை கீழ்க்கட்டளையில் வசித்து வந்ததால், அவர் பள்ளி விடுதியில் தங்கி கல்வி கற்று வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உடல் இப்படியா கிடக்கும்? மகனின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்...

தகவலின்படி, சம்பவத்தன்று அதிகாலை 6 மணி அளவில் மாணவி தனது தாயிடம் செல்போனில் பேசியுள்ளார். அதன்பின் சில நிமிடங்களிலேயே விடுதி அறையில் தூக்கிட்டு உயிரிழந்ததாக விடுதி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

உடலை வாங்க மறுத்த பெற்றோர்

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். ஆனால், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆதரவுடன் பள்ளி முன்பு சாலை மறியல் நடைபெற்றது. இதனால் காஞ்சிபுரம் – உத்தரமேரூர் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தந்தையின் கண்ணீர் கோரிக்கை... தீவிரமாகும் விசாரணை

சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP), பள்ளி வளாகம் மற்றும் விடுதி அறைகளை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். அப்போது, “இது ஒரு மோசமான பள்ளி. ஏற்கனவே என் மகள் சில புகார்களை கூறியிருந்தாள். அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என் மகளுக்கு நடந்தது வேறு எந்த குழந்தைக்கும் நடக்கக் கூடாது” என்று மாணவியின் தந்தை மாணவி மரணம் குறித்து கண்ணீருடன் நீதி கோரினார்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினரும் பள்ளிக்கல்வித்துறையினரும் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: காட்டுக்குள் மலம் கழிக்க சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி! உடல் துண்டு துண்டாகக் வெட்டப்பட்ட நிலையில் ..... தூத்துக்குடி அருகே நடந்த கொடூரம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kanchipuram #காஞ்சிபுரம் #school hostel #மாணவி மரணம் #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story