×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சல்சா நடணத்தில் இலங்கை பெண்ணிடம் சல்சா செய்த நடண இயக்குனர்..! சின்மயி வலையில் அடுத்த பிரபலம்

Kalyan master in harassment

Advertisement

பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பிறர் அவருடன் பகிரும் பாலியல் தொல்லைகள் பற்றிய புகார்களை வெளியிட்டு வருகிறார். இந்த வலையில் பல பிரபலங்கள் சிக்கி சின்னாபின்னமாகின்றனர். 

அந்த வகையில் சமீபத்தில் அவர் கவிஞர் வைரமுத்து பற்றி வெளியிட்ட பாலியல் புகார் மிகுந்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் அவர் அடுத்த ஒரு சினிமா பிரபலத்தினை பற்றிய பாலியல் புகாரை வெளியிட்டுள்ளார். 

இந்த பதிவானது ஒரு நடண இயக்குனரால் பாதிக்கப்பட்ட இலங்கை பெண் அவருடன் பகிர்ந்துகொண்டது. தன்னிடம் நடணம் பயில வந்த அந்த பெண்ணிடம் இப்படி நடந்தள்ளார் நடண இயக்குனர் கல்யாண். 

அந்த பெண் பகிர்ந்தள்ள பதிவில் நடணத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட தாம் நடணம் கற்க 2010 ஆம் ஆண்டில் வந்ததாகவும்,  தன்னுடைய சல்சா நடண குருவின் மூலம் கல்யாண் மாஸ்டரை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். 

அப்போது அவருடன் சல்சா நடணம் புரிய கேட்டுக்கொண்ட கல்யாண் தன்னை தகாத முறையில் பல இடங்களில் தொட்டார் என்றும் அதனால் தலைவலி என்று தப்பித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

அதோடு நின்றுவிடாத கல்யாண் அந்த பெண்ணின் நம்பரை பெற்று அன்று இரவே அவரை அழைத்துள்ளார். அப்போது பேசிய அவர் "இன்று இரவு நீ என்னுடன் படுத்தால் நீ என்னுடன் உதவி நடண இயக்கனராக வேலை செய்யலாம்" என்று கூறியுள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனே அழைப்பை துணடித்துவிட்டு வெறும் திறமையை மட்டும் வைத்துக் கொண்டு சினிமாவில் நுழைய முடியாது என்று உணர்ந்துள்ளார். பின்னர் தன் கணவுகள் அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு தன் தாய் நாட்டிற்கே திரும்பிவிட்டதாக தெரிவித்தள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story