பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்... கபடி பயிற்சியாளர் போக்சோவில் கைது.!!
பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்... கபடி பயிற்சியாளர் போக்சோவில் கைது.!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் அருண்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர், எஸ்.ஆர்.எஸ் நகரை சேர்ந்த அருண்குமார்(38), இவர் கபடி மற்றும் கைப்பந்து பயிற்சியாளராக உள்ளார். இவர் ஒரு பயிற்சி மன்றம் ஒன்றையும் நடத்தி வந்தார். மேலும் சூலூர் அருகேயுள்ள அரசு பள்ளியொன்றில் மாணவிகளுக்கு கபடி மற்றும் கைப்பந்து பயிற்சியும் அளித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2 மாதமாக அருண்குமார், பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் அந்த பள்ளியில் படிக்கும் 4 மாணவிகள் மைதானத்தில் தனியாக இருந்தபோது அவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறேன் என்று கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்து போன மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அட கொடுமையே... +2 மாணவிக்கு பாலியல் டார்ச்சர்.!! கணக்கு டீச்சர் கைது.!!
இதனைக் கேட்டு அதிர்ந்து போன தலைமையாசிரியர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து மகளிர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் அருண்குமார் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதை உறுதி செய்த போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் அவரால் வேறு ஏதும் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள.? என்று விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமி கர்ப்பம்... மது போதையில் தந்தை செய்த கொடூரம்.!!