×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

KA Sengottaiyan: கே.ஏ. செங்கோட்டையனை இயக்கும் பாஜக? அவரே கூறிய உண்மை.. முக்கிய உறுதி.!

அதிமுகவில் நீண்டகாலம் முக்கியப் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்ததால் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

Advertisement

தவெகவில் இணைந்த கே.ஏ.செங்கோட்டையன் கட்சியில் இணைந்த காரணம் குறித்த விளக்கத்தை அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதிமுகவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக முக்கிய பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை அக்கட்சியுடன் கொண்டார். இந்த விஷயம் தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கிய நிலையில், செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுகவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். 

தவெகவில் இணைய பாஜக காரணமா? 

இதனிடையே பாஜக கொடுத்த அழுத்தம் காரணமாகவே செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார். இது தொடர்பான பேட்டியில், "தவெகவில் இணைய சொல்லி என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. 

இதையும் படிங்க: KA Sengottaiyan: 'முதல்வர் விஜய்' கோவை மண்ணில் காலடி வைத்ததும் கர்ஜித்த கே.ஏ. செங்கோட்டையன்.. அதிரடி பேச்சு.!

செங்கோட்டையனின் பதில்:

நல்லது, கெட்டது என அனைத்தையும் ஆராய்ந்து யோசித்துப் பார்த்த பிறகு இணைந்துள்ளேன். எனது அரசியல் பொது வாழ்க்கையில் நான் எப்போதும் மனசாட்சிபடியே நடந்து வருகிறேன். அந்த நிலை அப்படியே தொடர்கிறது. எனது வாழ்க்கையில் தூண் போல இருந்தவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா. அவர்களின் தலைமையிலேயே நான் வளர்ந்தேன். 

அந்த ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தூய அரசியல் இன்றும் மறக்க முடியாதது. நான் அவரை மதித்து செயல்படுகிறேன். நான் எந்த பதவிக்காகவும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையவில்லை. எனது உழைப்பை கட்சிக்காக மொத்தமாக தந்தவன் நான்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அடுத்தடுத்த அதிர்ச்சியில் எடப்பாடி! செங்கோட்டையனின் அடுத்த தடபுடலான தரமான சம்பவம்...! பலரை தவெக கட்சியில் இணைத்தார்..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sengottaiyan #TVK Vijay #செங்கோட்டையன் #தவெக விஜய் #பாஜக
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story