நேற்று குஷ்பூ மகள் திருமணத்தில் பட்டு வேஷ்டியில் பாக்யராஜ்! இன்று இறந்துட்டாரே... கலங்கிய சிரஞ்சீவி, குஷ்பூ.. கடைசி நிமிட வீடியோ வைரல்..!!!
திரையுலகின் பன்முக கலைஞர் கே. பாக்யராஜ் 73 வயதில் மாரடைப்பால் காலமான நிலையில், அவர் கடைசியாக குஷ்புவின் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ், 73 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தது ரசிகர்களையும் திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல வெற்றி திரைப்படங்களை இயக்கியதோடு, நடிகராகவும் தனக்கென தனி முத்திரை பதித்த அவர், பொதுநிகழ்ச்சியில் கடைசியாக பங்கேற்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கடைசியாக கோவாவில் நடந்த திருமண விழாவில் பங்கேற்பு
25-க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பாக்யராஜ், 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றிய அவர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முகத் திறமையால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருந்தார். நேற்று முன்தினம் கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்புவின் மூத்த மகள் திருமண விழாவில் பட்டு வேஷ்டி, சட்டையில் கலந்து கொண்டதே அவரது கடைசி பொதுநிகழ்ச்சி தோற்றமாக அமைந்தது.
இதையும் படிங்க: ரோபோ சங்கர் உடலுக்கு பணமாலை போட்டு அஞ்சலி செலுத்திய சண்டை பயிற்சியாளர்! அவர் சொன்ன காரணம்! வீடியோ வைரல்..
வைரலாகும் கடைசி வீடியோ
திருமண நிகழ்ச்சியில் அவர் உற்சாகமாக கலந்து கொண்டு விருந்தினர்களுடன் உரையாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. அந்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
திரையுலகினரின் உருக்கமான அஞ்சலி
நடிகர் சிரஞ்சீவி வெளியிட்ட இரங்கல் பதிவில், “நேற்று முன்தினம் நாங்கள் அனைவரும் ஒன்றாக சிரித்துப் பேசி செல்பி எடுத்துக் கொண்டோம். இன்று அவர் இல்லை என்ற செய்தியை இன்னும் நம்ப முடியவில்லை” என்று வேதனை தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகை குஷ்புவும், “உங்களுடன் பகிர்ந்த சிரிப்பும் மகிழ்ச்சியான தருணங்களும் என்றும் நினைவில் இருக்கும். உங்களை நாங்கள் எப்போதும் மிஸ் செய்வோம்” என்று உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.