×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

30 லிட்டர் தாய்பாலை தானம் செய்த பிரபல நடிகரின் மனைவி! குவியும் பாராட்டுக்கள்...

நடிகர் விஷ்ணு விஷால் மனைவி ஜுவாலா கட்டா 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்த செய்தி வைரலாகி தாய்மார்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Advertisement

தாய்மையின் அருமையை எடுத்துக்காட்டும் விதமாக, பிரபல பேட்மிண்டன் வீராங்கனையும் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜுவாலா கட்டா, தன்னுடைய மனிதாபிமான செயலால் சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

விஷ்ணு விஷால் குடும்பம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், முதலில் தனது கல்லூரி தோழி ரஜினி நடராஜை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஆர்யன் என்ற மகன் பிறந்தார். பின்னர் விவாகரத்து ஏற்பட்ட நிலையில், 2021ஆம் ஆண்டு இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை மறுமணம் செய்து கொண்டார். இந்த ஆண்டு இவர்களுக்கு மீரா என்ற பெண் குழந்தை பிறந்தது.

30 லிட்டர் தாய்ப்பால் தானம்

புதிய குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து, ஜுவாலா தினமும் 600 மில்லி லிட்டர் தாய்ப்பாலை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்து வருகிறார். இதுவரை 30 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பால், தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்கள் அல்லது பிரசவத்திற்குப் பிறகு குழந்தையை விட்டுச் சென்ற தாய்மார்களின் குழந்தைகளுக்கு உயிர் காக்கும் உதவியாக உள்ளது.

இதையும் படிங்க: நான்கு வருட காதல்! ஆனால் கல்யாணம் வேறொரு பெண்ணுடன்! காதலன் வீட்டிற்கு சென்று நொடியில் பெண் செய்த அதிர்ச்சி செயல்! பரபரப்பு வீடியோ...

சமூகத்துக்கு ஒரு விழிப்புணர்வு

இந்த தானம், மற்ற தாய்மார்களும் குழந்தைக்கு அளிக்க முடியாமல் மீதமுள்ள பாலை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் பல குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். தற்போது இந்த செயல் இணையத்தில் வைரலாகி, ஜுவாலா மற்றும் விஷ்ணு விஷால் தம்பதியருக்கு பெருமளவு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இவ்வாறான மனிதாபிமானம் கொண்ட செயல்கள் சமூகத்திற்கு பெரும் நன்மையைக் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை. தாய்ப்பால் தானம் மூலம் உயிர்களை காக்கும் இந்த முயற்சி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது.

 

இதையும் படிங்க: அது எப்படி? 52 வயதில் தந்தை செய்த பெரிய சாதனை! மகன் அளித்த இன்ப அதிர்ச்சி காணொளி வைரல்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#விஷ்ணு விஷால் #ஜுவாலா கட்டா #தாய்ப்பால் தானம் #Tamil Cinema news #Breast Milk Donation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story