×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு..! 9 மணிக்கு முடிவதாக இருந்த உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு.!

Janata Curfew extended up to tomorrow 5 am in tamilnadu

Advertisement

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து, இந்தியா முழுவதும் இன்று ஒருநாள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அணைத்து விதமான போக்குவரத்து, கோவில்கள், வணிக வளாகங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்பட இந்த ஊரடங்கு உத்தரவு தற்போது அடுத்தநாள் காலை 5 மணிவரை நீடிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story