×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போராட்ட எதிரொலி: தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசாணை வெளியானது

jacdo jio - government staffs - strike - chennai

Advertisement

அரசு பள்ளி ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது தொடர்பான பல கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் அரசு பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் 25ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.

ஆனால் இந்த உத்தரவை மீறி தொடர் போராட்டத்தில் ஈடு படப்போவதாக தெரிகிறது.  இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பொதுத்தோ்வுகள் நெருங்கி வருவதால் ஆசிாியா்களின் போராட்டமானது மாணவா்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே அவா்களுக்கு பதிலாஎ ரூ.7,500 தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிாியா்களை நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இவா்களை பெற்றோா் ஆசிாியா் கழகத்தின் மூலம் தோ்வு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிாியா்களுக்கு பணி விதிமுறை எண் 18பி-ன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலம் அவா்கள் மீது ஊதிய பிடித்தம் அல்லது பணியிடை நீக்கம் உள்ளிட்டட நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு உள்ளதாக அதில் தொிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jacto geo #gvt school #school education
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story