தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பூஜையின்போது அய்யப்ப சுவாமி சிலை கண் திறந்ததாக பரபரப்பு.!! வைரலாகும் பரவச வீ்டியோ.!

பூஜையின்போது அய்யப்ப சுவாமி சிலை கண் திறந்ததாக பரபரப்பு.!! வைரலாகும் பரவச வீ்டியோ.!

iyappan statue open eyes in pooja Advertisement

கோவையில் அய்யப்பன் சுவாமி கண் திறந்ததாக வெளியிடப்பட்ட வீடியோ பக்தர்களிடையே பரபரப்பையும் பரவசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை செல்வபுரம் தில்லை நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐயப்ப சாமிக்கு தனி சன்னதி இருக்கிறது. அங்குள்ள அய்யப்ப சுவாமிக்கு 40-ம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது.  இதில் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்தவர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

அங்கு பூஜையில் சாமிக்கு நெய், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை பக்தர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். அப்போது ஒருவர் தான் எடுத்த வீடியோவை கவனித்து பார்த்தபோது, அபிஷேகம் நடைபெற்று கொண்டு இருந்தபோது அய்யப்ப சாமி சிலை கண் திறந்து மூடுவது போல பதிவாகி இருந்தது. 

இந்த விடியோவை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.  

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#iyappan #Pooja
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story