தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக போராட்டத்தில் பெண்கள்.!

It'll store 3ed days at public.

 It'll store 3ed days at public. Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் திங்கட்கிழமை சந்தை அருகே, டாஸ்மாக் கடையை அகற்ற கோரி 3-வது நாளாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

டாஸ்மாக்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கட்கிழமை சந்தை அடுத்த பரசேரி காட்டுவிளை பகுதியில், புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்கள் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி நேற்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

இதையடுத்து நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாக, இந்தாண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட போவதில்லை என பரசேரி காட்டுவிளை கிராமத்தினர் தெரிவித்திருக்கின்றனர். 


இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும், வருவாய்துறையினரும், இரண்டு நாட்களுக்குள் கடை மாற்றப்படும் என உறுதிளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு மக்கள் கலைந்து சென்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#டாஸ்மாக் #tamil news #Tamil news updates #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story