"வெந்நீரில் மூழ்கடித்து 15 மாத குழந்தை படுகொலை.." கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் சிறை.!!
வெந்நீரில் மூழ்கடித்து 15 மாத குழந்தை படுகொலை.. கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் சிறை.!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 15 மாத ஆண் குழந்தை, வெந்நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட கள்ளக்காதல் ஜோடியான சதாம் உசேன் மற்றும் பிரபுஷா ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நாகர்கோவில் செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள மயிலாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபுஷா. திருமணமான இவருக்கு 15 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் பிரபுஷாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். பிரபுஷாவிற்கு குழந்தை பிறந்ததால் அவரால் கள்ளக்காதலனுடன் முன்பு போல் நெருக்கமாக இருக்க முடியவில்லை.
மேலும் அவர்கள் இருவரும் சந்திப்பதற்கும் குழந்தை தடையாக இருந்திருக்கிறது. இந்நிலையில் 2023 ஆம் வருடம் நவம்பர் மாதம் 14ம் தேதி சதாம் உசேன் மற்றும் பிரபுஷா ஆகியோர் தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது குழந்தை அழுது கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த சதாம் உசேன் குழந்தைக்கு மது கொடுத்தும், சிகரெட்டால் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியிருக்கிறார். மேலும் இருவரும் சேர்ந்து குழந்தையை கொதிக்கும் வெந்நீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நாகர்கோவில் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: கள்ள தொடர்பு.. கணவன், குழந்தை கொலை.!! பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.!! காதலன் ரிலீஸ்.!!
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், 15 மாத குழந்தையை கொடூரமாக கொலை செய்த கள்ளக்காதல் ஜோடியான பிரபுஷா மற்றும் சதாம் உசேன் ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். நாகர்கோவில் மாவட்டத்தையே நடுங்கச் செய்த இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்திருப்பதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: "விடாமல் துரத்திய கள்ளக்காதல்..." கழுத்தை நெரித்து கணவன் கொலை.!! மனைவி, காதலன் வெறி செயல்.!!