அற்புதமான காட்சி! சுதந்திர தினத்தில் தேசிய விலங்கை பின்தொடர்ந்து செல்லும் தேசிய பறவை! இயற்கையின் தேசப்பற்று! வைரல் வீடியோ...
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தில் புலியும் மயிலும் ஒரே பிரேமில் தோன்றிய அரிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, தேசப்பற்று உணர்வை தூண்டுகிறது.
இந்தியாவின் 79வது சுதந்திர தினம் கொண்டாட்டத்தின் நேரத்தில், இயற்கை வழங்கிய அரிய தருணம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. புலியும் மயிலும் ஒரே பிரேமில் தோன்றிய வீடியோ, மக்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.
தேசிய சின்னங்கள் ஒரே காட்சியில்
இந்த காணொளியில், மயில் மெதுவாக நடந்து செல்ல, அதன் பின்னால் புலி அமைதியாக நடந்து செல்கிறது. தேசிய விலங்கு புலி வலிமையையும் தைரியத்தையும் பிரதிபலிக்கிறது; அதேவேளை, தேசியப் பறவை மயில் மகிழ்ச்சியையும் அழகையும் குறிக்கிறது. இரண்டும் ஒன்றாக தோன்றிய இந்த காட்சி, இந்தியாவின் ஆன்மாவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
வனவியல் அதிகாரியின் பகிர்வு
இந்த வீடியோவை ராகேஷ் பட் பதிவு செய்துள்ளார். பின்னர் தலைமை வனப்பாதுகாவலர் (IFS) டாக்டர் பி.எம். தகாதே தனது எக்ஸ் பக்கத்தில் இதை பகிர்ந்து, “ஒரு அற்புதமான காட்சி, நமது தேசிய விலங்கு மற்றும் தேசியப் பறவை ஒரே வீடியோவில் தோன்றியது, இது தேசப்பற்று உணர்வின் சின்னம்” என்று குறிப்பிட்டார். மேலும், அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: video: தாகத்தில் பாலைவனத்தில் சுருண்டு கிடந்த ஒட்டகம்! ஓடி வந்து நபர் செய்த செயலை பாருங்க...
நெட்டிசன்களின் எதிர்வினை
வீடியோவில் புலியும் மயிலும் ஒன்றாக நடந்து செல்லும் இந்த காட்சி, இயற்கையின் அதிசயமாக பலரால் வரவேற்கப்பட்டுள்ளது. “என்ன ஒரு அரிய தருணம், இந்த சுதந்திர தினத்தில் இயற்கை வழங்கிய அற்புத பரிசு” என்று நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். மேலும், இது கொண்டாட்டங்களை இன்னும் சிறப்பாக மாற்றியதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த அற்புதமான புலி மயில் வீடியோ இந்தியாவின் பண்பாடு, இயற்கை, தேசப்பற்று ஆகியவற்றின் உண்மையான பிரதிபலிப்பாக மக்கள் மனங்களில் நிலைத்திருக்கிறது.
இதையும் படிங்க: குழிக்குள் பாம்பு - கீறி! படமெடுத்து தாக்கிய பாம்பிடம் சண்டை போட்ட கீரி! இறுதியில் என்ன நடந்ததுன்னு நீங்களே பாருங்க! திகில் வீடியோ...