பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. போக்ஸோ வழக்கில் சிக்கியும் திருந்தாத ஓட்டுநர்..!
Viluppuram News: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
ஐந்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுனர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஓட்டுநர்:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கானை, இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜன். இவரின் மகன் அந்தோணி ராஜ் (வயது 26). இவர் சரக்கு வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.
இதையும் படிங்க: என் பேத்திக்கா செக்ஸ் டார்ச்சர் கொடுக்குறா? ஓடஓட விரட்டி வெட்டிய பாட்டி.. கரூரில் கறார் சம்பவம்.!
ஐந்தாம் வகுப்பு மாணவி:
இதனிடையே, அந்தோணி ராஜ் 2 நாட்களுக்கு முன்னர், வேறொரு கிராமத்தில் வசித்து வரும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
புகார்:
இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறி இருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அந்தோணி ராஜை கைது செய்தனர்.
கைது:
தொடர்ந்து கைது நடவடிக்கைக்குப்பின் அந்தோணி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் மீது கடந்த 2023 ம் ஆண்டில் போக்ஸோ வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் போக்ஸோ வழக்கு பதிவாகி இருக்கிறது.
இதையும் படிங்க: "பதவி வேண்டுமா? வாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க" - தவெக நிர்வாகிக்கு எதிராக பெண் பகீர் புகார்.!