திருச்சி: பேனர் வைத்தபோது சோகம்; புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி மரணம்.!
திருச்சி: பேனர் வைத்தபோது சோகம்; புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி மரணம்.!

கடைக்கு பேனர் வைக்கும்போது புதுமாப்பிள்ளை மின்சாரம் பாய்ந்து பலியான சோகம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, நம்பர் 1 டோல்கேட், அகிலாண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரின் மகன் சக்திவேல். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது.
இதையும் படிங்க: யாசகம் பெற்று பிழைப்பு நடத்திய பெண்ணுடன் கள்ளக்காதல்.. கர்ப்பமானதால் கொலை.. திருச்சியில் பயங்கரம்.!
சக்திவேல் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வந்த நிலையில், நேற்று கடைக்கு மேல் புதிய பேனர் வைக்க முற்பட்டுள்ளார். அப்போது, கடையின் மேல்புறத்திற்கு அருகில் மின்சார கம்பியும் சென்றுள்ளது.
மின்சாரம் தாக்கி சோகம்
பிளக்ஸ் பேனர் வைக்கும் பணியில் சக்திவேல் ஈடுபட, அப்போது, அவரின் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் மின்சாரம் சக்திவேலின் உடலில் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
படுகாயமடைந்த சக்திவேலை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை அவசர ஊர்தி உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த சமயபுரம் காவல்துறையினர், சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆபிஸ் ஷட்டரை பூட்டி கணவரை பிரிந்த இளம்பெண் பலாத்காரம்; நிர்வாண போட்டோவை பகிர்ந்து பகிரங்க மிரட்டல்.!