×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன பேச்சு செல்போன்ல? அக்காவை கொன்ற தம்பி.. நெல்லையில் திடுக்கிடவைக்கும் சம்பவம்.!

Nellai News Today: செல்போனில் அடிக்கடி பேசி வந்த சகோதரியை கொலை செய்த சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.

Advertisement

அக்காவை சகோதரன் கொலை செய்த சம்பவத்தில், குற்றவாளி கூறிய அதிர்ச்சி காரணம் அதிகாரிகளை பதறவைத்துள்ளது.

அக்கா-தம்பி:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி, மேலகிராமம் பகுதியில் வருபவர் ஆறுமுகம். இவரின் மனைவி கண்ணம்மாள். தம்பதிகளுக்கு ராமலட்சுமி (வயது 23) என்ற மகள் இருக்கிறார், முத்துகிருஷ்ணன் (வயது 21) என்ற மகனும் இருக்கிறார். ராமலட்சுமி கங்கைகொண்டான் சிப்காட்டில் செயல்படும் சோலார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்.!

செல்போன் பேச்சு:

முத்துகிருஷ்ணன் அங்கு செயல்படும் ஹோட்டல் ஒன்றில் கேஷியராக இருக்கிறார். இதனிடையே, ராமலட்சுமி அவ்வப்போது செல்போனில் ஒரு நபருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் ராமலட்சுமியின் சகோதரர் முத்துகிருஷ்ணனுக்கு தெரியவரவே, வார விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் அக்காவிடம் இதுகுறித்து கேட்டு கண்டித்து இருக்கிறார்.

ஊருக்கு வந்தவர் வெறிச்செயல்:

இதனை கண்டுகொள்ளாத பெண்மணி தொடர்ந்து செல்போனில் பேசி வந்த நிலையில், தம்பியின் செயல்பாடுகளை கவனிக்கவில்லை. இதனிடையே, சுத்தமல்லியில் நடைபெறும் கோயில் திருவிழாவுக்காக முத்துகிருஷ்ணன் ஊருக்கு வந்துள்ளார். ராமலட்சுமியின் பெற்றோர் மாடுகளுக்கு தண்ணீர் வைக்க வெளியே சென்றுள்ளனர். 

செல்போனில் பேசினார்:

இந்த சமயத்தில் ராமலட்சுமி செல்போனில் பேசவே, இதனை பார்த்த முத்துகிருஷ்ணன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் முத்துகிருஷ்ணன் அரிவாளை எடுத்து ராமலட்சுமியை சரமாரியாக வெட்டியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சுத்தமல்லி காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சோறு சமைக்கலையா? 56 வயது கள்ளக்காதலியை குத்திக்கொன்ற 28 வயது இளைஞர்.. திடுக் சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #tirunelveli #திருநெல்வேலி கொலை #அக்கா தம்பி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story