×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீடு ஜப்தி நடவடிக்கையில் விபரீதம்; லாரி ஓட்டுநர் பூச்சி மருந்து குடித்து, உயிருக்கு போராடி மரணம்.! 

வீடு ஜப்தி நடவடிக்கையில் விபரீதம்; லாரி ஓட்டுநர் பூச்சி மருந்து குடித்து, உயிருக்கு போராடி மரணம்.! 

Advertisement

கடனை செலுத்த இயலாதவரின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்ற ஆணையுடன் நிதித்துறை, காவல்துறை அதிகாரிகள் வந்த நிலையில், வீடு பறிபோய்விடும் என்ற பயத்தில் பூச்சி மருந்து குடித்தவர், உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் துளதுடிக்க உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் ஸ்ரீவைகுண்டம் அருகே நடந்துள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு, பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சங்கரன். இவரின் மனைவி பத்ரகாளி. சங்கரன் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2020 ம் ஆண்டு தம்பதிகளுக்கு சொந்தமான வீட்டின் பத்திரத்தை, தனியார் நிதி நிறுவனத்தில் வைத்து ரூ.5 இலட்சம் கடன் வாங்கப்பட்டுள்ளது. 

கடனுக்கான மாத தவணையை தொடர்ந்து செலுத்தி வந்தவர், சில மாதங்களாக வேலையின்மை மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக பணத்தை செலுத்தாமல் தவித்துள்ளார். இதனால் தனியார் நிதி நிறுவன அதிகாரிகள், நீதிமன்றத்தில் முறையிட்டு வீட்டினை ஜப்தி செய்ய அனுமதி வாங்கி காவல்துறை பாதுகாப்புடன் வந்துள்ளனர். 

இதையும் படிங்க: தாழ்வாக தொங்கிய மின்கம்பி உரசி விவசாயி பலி.. தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களின் அலட்சிய உச்சத்தால் பறிபோன உயிர்.!

பூச்சி மருந்து குடித்தனர்

காலை 11 மணியளவில் வீட்டினை ஜப்தி செய்ய வந்த நிலையில், வீட்டில் இருந்த தம்பதி மற்றும் குழந்தைகளை வெளியேறினர். இதனால் ஆத்திரமடைந்த பத்ரகாளி பூச்சி மருந்தை பத்ரகாளி குடித்துள்ளார். மேலும், அதிகாரிகள் அதனை தட்டிவிட்டபோது, அந்த பாட்டிலை எடுத்து சங்கரனும் அதனை குடித்தார். 

சங்கரன் மரணம்

இதனால் மயங்கிய சங்கரன் 45 நிமிடங்களாக அங்கேயே துடித்து மோசமான உடல்நிலையை அடைந்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சங்கரன் உயிரிழந்த நிலையில், பத்ரகாளி சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

குழந்தைகள் பரிதவிப்பு

சங்கரன் - பத்ரகாளி தம்பதிக்கு 18 வயதுடைய பானு, 15 வயதுடைய கல்யாணி என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். பிள்ளைகள் இருவரும் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து, அதிகாரிகள் காத்திருந்த நேரத்தில், அவர்களின் வாகனத்தில் இருவரையும் அழைத்து சென்றிருந்தால், சங்கரனின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும் என உறவினர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: என் புள்ள போயிருச்சே - மூச்சுத்திணறி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை.. மருத்துவமனையில் சோகம்.. பெற்றோர் குமுறல்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thoothukudi #tamilnadu #suicide #Home loan #தூத்துக்குடி #வல்லநாடு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story