திருவாரூர் கொலை சம்பவத்தில் கைதான நபர் திடுக் வாக்குமூலம்.! மகள், மகன், மனைவி கண்முன் ரணபயங்கரம்.!
Thiruvarur Crime News: குடவாசல் செங்கல் வியாபாரி கொலை வழக்கில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணியின் கள்ளக்காதலனை கண்டித்த நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
அழகிய குடும்பம்:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல், சேங்காலிபுரம் பகுதியில் வசித்து வருபவர் திருமுகம் (வயது 50). இவர் செங்கல் சூளையில் செங்கலை குத்தகைக்கு எடுத்து விற்பனை செய்து வரும் தொழிலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவில் தனது மனைவி சுதா (வயது 45), மகன் சுமன் (வயது 15), மகள் யாழினி (வயது 13) ஆகியோருடன் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: காதல் திருமணம் கசந்ததால் கள்ளக்காதல்.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. அரங்கேறிய பயங்கரம்.!
குடும்பத்தினர் கண்முன் கொலை:
அதிகாலை நேரத்தில் வீட்டுக்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், பூட்டியிருந்த கதவை உடைத்து இருக்கிறது. வீட்டுக்குள் புகுந்து திருமுகம், சுதா ஆகியோரை வெட்ட முயற்சித்துள்ளது. சுதாவின் இடது கையில் வெட்டு விழுந்த நிலையில், சத்தம் கேட்டு குழந்தைகளும் எழுந்துள்ளன. அச்சமயம், மனைவி, குழந்தைகள் கண்முன் திருமகத்தின் தலை, முகத்தில் சரமாரியாக வெட்டியா கும்பல், முகத்தை சிதைத்து அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த சம்பவத்தில் திருமுகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
அதிரடி கைது:
தகவல் அறிந்து வந்த குடவாசல் காவல்துறையினர், திருமுகத்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வழக்கறிஞர் ராஜா (வயது 38) கைது செய்யப்பட்டு விசாரிக்கப்ட்டர். அப்போது, கண்மணி (வயது 33), மணிகண்டன் (வயது 35), தீபன் (வயது 30), கண்ணன் (வயது 40), 17 வயது சிறுவன் ஆகிய 6 பேர் சேர்ந்து கொலை சம்பவத்தை அரங்கேற்றியது உறுதி செய்யப்பட்டது.
கள்ளக்காதலை கண்டிக்க கூறியதால் ஆத்திரம்:
கொலை சம்பவம் குறித்து ராஜா அளித்த வாக்குமூலமும் வெளியாகியுள்ளது. அதாவது, ராஜாவின் சகோதரர் சரவணன் (வயது 40), அவரின் மனைவி சூர்யா (வந்து 35), வடகண்டத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். சரவணன் சென்னையில் செயல்படும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அப்போது, ராஜாவுக்கும், அவரின் அண்ணி சூர்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விஷத்தை அறிந்த சரவணன், திருமுகத்திடம் தகவலை தெரிவித்து கண்டிக்கச்சொல்லி இருக்கிறார்.
அறிவுரை வழங்கியதால் பயங்கரம்:
திருமுகமோ, அண்ணன் சரவணன் உடல்நிலை சரியில்லாதபோதும் சென்னையில் குடும்பத்துக்காக வேலை பார்க்கிறார். இப்படி செய்வது சரியா? கள்ளக்காதல் உறவை துண்டித்துவிட்டு என ராஜாவிடம் கூறியுள்ளார். இதனை ராஜா கேட்காத நிலையில், திருமுகம் சரவணனுக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்து அண்ணியை சென்னைக்கு அழைத்துச் சென்றுவிட்டு என தெரிவித்து இருக்கிறார். இதனால் சரவணன் தனது மனைவியை சென்னை அழைத்து சென்றுள்ளார். இதனால் சூர்யாவை ராஜாவால் சந்திக்க முடியாத நிலையில், ஆத்திரத்தில் கொலை சம்பவம் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இதையும் படிங்க: சோறு சமைக்கலையா? 56 வயது கள்ளக்காதலியை குத்திக்கொன்ற 28 வயது இளைஞர்.. திடுக் சம்பவம்.!