ஆடு சரிவர மேய்க்காத சிறுவன் அடித்தேகொலை.. தாய், சகோதரர்களை அடைத்து சித்ரவதை.. தமிழகத்தில் நடந்த கொடுமை.!
15 வயது சிறுவனை அடித்துக்கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
சிறுவனை கொலை செய்துவிட்டு மறைத்த பண்ணை உரிமையாளர், அவரின் நண்பர் கைது செய்யப்பட்டார்.
பண்ணை வேலை:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, முருக்கம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் முருகன் (வயது 48). இவர் விவசாய நிலத்தினை குத்தகைக்கு எடுத்து ஆடு, கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளார். இவரின் பண்ணையில் வேலை செய்ய வினோத் என்பவர் தனது சகோதரி வெண்ணிலா, அவரின் 3 மகன்களை அனுப்பி வைத்துள்ளார். கடந்த 8 மாதங்களாக தாய்-மகன்களாக இவர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: Tiruvannamalai News: கள்ளக்காதல் ஜோடியை உயிருடன் கொளுத்திய பயங்கரம்.. குடிசை வீட்டில் கரிக்கட்டையான சோகம்.!
சித்ரவதை:
இவர்களுடன் வெண்ணிலாவின் சகோதரர் வினோத்தும் இருந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு வெண்ணிலாவின் மூத்த மகன் சுரேஷ் (வயது 15) சரிவர ஆடு பொய்க்கவில்லை என்று பண்ணை உரிமையாளர் முருகனால் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அவர் உயிரிழந்த நிலையில், வினோத்தின் உதவியுடன் பண்ணையில் சடலத்தை புதைத்து இருக்கின்றனர். இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருக்க வினோத், முருகன் இணைந்து வெண்ணிலா, 2 சிறார்களை ஆட்டுப்பண்ணையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்துள்ளனர்.
சடலம் மீட்பு:
இதனிடையே, வெண்ணிலா சம்பவத்தன்று அங்கிருந்து தப்பி திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் நேரில் சென்ற காவல்துறையினர் சிறார்களை மீட்டனர். மேலும், முருகன், வினோத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், சடலத்தை புதைத்த சிமெண்ட் தரையை உடைத்து உடலை மீட்டனர்.
இதையும் படிங்க: சோறு சமைக்கலையா? 56 வயது கள்ளக்காதலியை குத்திக்கொன்ற 28 வயது இளைஞர்.. திடுக் சம்பவம்.!