சாலையில் கிடந்த இலட்சம் பணம்; தந்தை-மகளாக நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டுக்கள்.!
சாலையில் கிடந்த இலட்சம் பணம்; தந்தை-மகளாக நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டுக்கள்.!
சிறுமியின் நெகிழ்ச்சி செயலால் இழந்த பணத்தை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரின் மகள் நிஷாந்தினி (வயது 12). அரசுப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: சிவகங்கை: பசு மீது விழுந்த மின்சார கம்பி; காப்பாற்ற முயன்ற பெண் பலி.!
சாலையோரம் கிடந்த பணம்
அச்சமயம், சாலையோரம் சில ஆவணத்துடன் பை கிடந்துள்ளது. இதனைக்கண்ட சிறுமி தந்தையை வாகனத்தை நிறுத்தச்சொல்லி பையை எடுத்து பார்த்தபோது, அதில் ரூ.1.85 இலட்சம் பணம் இருந்தது. சில ஆவணங்களும் இருந்தன.
காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
இதனையடுத்து, தேவகோட்டை காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற தந்தை - மகள், விஷயத்தை கூறி பையை ஒப்படைத்து இருக்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், பணம் மற்றும் ஆவணம் கல்லங்குடி பகுதியில் வசித்து வரும் மாணிக்கம் என்பவருக்கு சொந்தமானது என்பதை தெரிந்துகொண்டுள்ளனர்.
இதனையடுத்து, அவரிடம் பணம் மற்றும் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. மேலும், நேர்மையுடன் செயல்பட்ட தந்தை-மகளை, தேவகோட்டை காவல் கண்காணிப்பாளர் கெளதம் நேரில் அழைத்து, சால்வை அணிவித்து பாராட்டினார்.
இதையும் படிங்க: நடுரோட்டில் துள்ளதுடிக்க நடந்த படுகொலை; நேரில் பார்த்து பதறியோடிய மக்கள் கூட்டம்.. 3 பேர் கும்பல் பகீர் செயல்.!