6 மாதத்தில் ஓய்வு.. லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வசமாக சிக்கிய விஏஓ.. ஆப்பு வைத்த இளைஞர்.!
VAO Arrested Bribery Case: விஏஓ லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
பட்டா மாறுதலுக்கு ரூ.20,000 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
20,000 வேண்டுமாம்:
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், வடமாம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் வினோத். இவர் வீட்டுமனை வாங்கி, அதனை தனது பெயருக்கு பட்டா மாற்ற வேண்டும் என ஆன்லைனில் விண்ணப்பித்து இருக்கிறார். இந்த விண்ணப்பத்தை வடமாம்பாக்கம் விஏஓ தணிகாசலம் மாற்றித்தர வேண்டும் என்ற நிலையில், அவர் ரூ.20,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!
லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல்:
ரூ.20,000 மிக அதிகம். கடன் வாங்கி நிலம் வாங்கி இருக்கிறேன் என வினோத் கெஞ்சிய நிலையில், ரூ.15,000 கட்டாயம் வேண்டும் என கூறி இருக்கிறார். இதனால் மனமுடைந்துபோன வினோத் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் லஞ்சம் கேட்பது ஏன்? என்ற விரக்தியில் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
6 மாதத்தில் ஓய்வு:
இதனையடுத்து, களத்தில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளனர். இந்த பணத்தை அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தணிகாசலத்தை அதிரடியாக கைது செய்தனர். சுமார் 6 மாதத்திற்குள் அவர் பணிஓய்வு பெறவுள்ள நிலையில், ரூ.15,000 லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: Sexual Abuse: பள்ளி மாணவி கர்ப்பம்.. காமுக பூசாரி அதிர்ச்சி செயல்.. வயிற்றிலேயே இறந்த சிசு.!